உன் நெஞ்சம் காதல் ஆலயத்தின் வாசல்

தேன் பூநடுவில் உன்னிதழ் விளிம்பில்
நிலா வான் மீதில் உன்முக நிழலில்
அலைகள் நதியில் மிதக்கும் உன்கூந்தலில்
வானவில் வானில் வளைந்து உன் மேனியில் நெளிந்து
மின்னல் முகிலிடையில் உன் கண்ணின் அசைவில்
கன்னக் குழிவு கவிதை மலரும் பூம்பொழில்
புன்னகை முத்துக்கள் பிறகும் இடம்
உன் நெஞ்சம் காதல் ஆலயத்தின் வாசல் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Dec-19, 7:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே