ஒருநாள் நிகழ்வு என்று

ஒருநாள் நிகழ்வு என்று ஒதுங்கிவிடாதே
ஒவ்வொருவரையும் உயரச் செய்யும் படியே தேர்தல்
மக்களே இங்கு மகத்தான நாயகர்கள்
மாற்றம் செய்ய அரசயலமைப்பு உருவக்கியதே தேர்தல்
காசு கொடுத்து வாங்க நினைக்கும் வேட்பாளராய்
கனநேரம் நீங்கள் உங்களை நினைத்தால்
தேர்தல் ஆழத்தின் தீவிரம் புரிந்து விடும்
பதவியால் கிடைத்த பணத்தால் நம்மை
பாடுபடுத்தி உதாசினப்படுத்தும் முறையைப்பார்.
ஒருவனால் மட்டும் மாற்ற முடியுமா என எண்ணாதே
வேட்பாளர் என்ற ஒருவனால் மாற்ற முடியும் போது
தேர்ந்தெடுக்கும் உன்னால் மாற்ற முடியாதா?
இலக்கு அதுதான் என்று விளக்கம் கொள்வோருக்கு
காற்றில் மிதந்துச் சென்று வெற்றிக் காண முடியும்
மனமே மகத்தான வழிக்காட்டி அதை வசப்படுத்து.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Dec-19, 9:10 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1352

மேலே