2020 திக்கட்டும் திழைக்கட்டும்

[3:27 PM, 12/27/2019] Solairaj: புது யுகமாய்
பல அதிசயங்கள் நீயும்
தருவாய் என்ற ஆவலே
உன்னை வரவேற்க ஆயத்தமானேன் !
புது வாசனையும்
புத்தம் புது வஞ்சனையும்
தவிர்ப்பாய் தாகம்
குறைப்பாய் என்ற போதனையில்
உனக்காய் காத்திருக்கிறேன்!
களிப்புறும் மனதுக்கு
ரெட்டிப்பு செய்தி தருவாய்
என்றே ஆவலாய்
எதிர்பார்க்கிறேன் !
என் ஆசான் கண்ட கனவு
வியவிப்பிக்கும் அதுவே
ஆளாபிக்கும் தருணம்
தரவேண்டி தவமிருக்கிறேன்!
வல்லரசு வேண்டாம்
எம்மை வாழவிடும் அரசு
தர தரணி வருவாய்
என்றே கத்தி அழைக்கிறேன் !
கனவு காலம் கலாமின் ஆசை
யாதும் ஊரே கணியன் ஆசை
கல்வி ஒன்றே காமராஜர் ஆசை
இவைகளை கற்பிக்க
வேண்டியது உன்வருகையின் ஓசை !
வானம் பிறக்கட்டும்
வாய்ப்புக்கள் வழங்கட்டும்
விவசாயம் ஓங்கட்டும்
விடுதலை நிலைக்கட்டும்
உன் வருகையில் இவை நடக்கட்டும்
2020 திக்கட்டும் திழைக்கட்டும்!

வருக வருக ... புத்தாண்டு தின வாழ்த்துக்கள் !

எழுதியவர் : ச. சோலைராஜ். (27-Dec-19, 1:13 pm)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 215

மேலே