நீ புயலாய் எழுந்தால்தான் புதுசரித்திரம் 555
என் தோழியே...
உன் வளைக்கரங்கள் உயர்ந்தால்
வின்னையும் தொட்டுவிடலாம்...
உன் கண்இமைகள்
உயர்ந்தால்...
ஆதிக்க வர்க்கங்களை
வென்றுவிடலாம்...
நீ சொல்லென்னும்
வாள்எடுத்து சுழன்றாள்...
சோகங்களை எல்லாம்
சூறையாடி விடலாம்...
நீ வீரம் என்னும்
வில்லேந்தினால்...
விதியும் உன்னிடம்
புறமுதுகு காட்டும்...
எப்போதும் தென்றலாக
இருந்துவிடாதே...
சில நேரங்களில் நீ
புயலாய் எழுந்தால்தான்...
புதுசரித்திரம்
படைக்க முடியும்...
இன்று வீட்டை
ஆளும் பெண்கள்...
நாளை வின்னையும்
ஆளலாம் என் தோழியே.....