காதல்
உடலிரண்டு உறவாடுது
புது உறவு உருவாகுது
அதுவே காதலெனும்
பெயர்கொண்டு சதிராடுது
உடலுறவிற்கு உருவுண்டு
உடலுக்கு உறவுள்ளதால்
காதலுக்கு உருவில்லை
அது காற்றுபோல
அதன் வீச்சை உணர முடியும்
அணைக்கும்போதும் அடிக்கும்போதும்