அன்பே
எனக்காக நீ காத்திருந்தாய்
என்று தெரியும்.
சொல்வதற்கு நிறைய வைத்துக்கொண்டு
சொற்களை தேடிக்கொண்டிருக்கிறாய் என்பதும் தெரியும்.
உன்வீட்டு வாசலில் உலாவிக்கொண்டு எனது
வருகையை
எனது ஒரு அழைப்பை எதிர்பார்த்திருந்தாய் எனவும் தெரியும்..
தொடர்பேதுமில்லா ஒரு
வனாந்திரத்தில் அகப்பட்டுள்ளேனென அறியாமல்
கடந்து போன நேரத்தினை
கடினமாய் கடந்துகொண்டிருந்தாய் என்றும் தெரியும்..
உன் சூழலில் ஒன்றாமல்
உணர்வுகளை குவித்துக்கொண்டு
ஏதேதோ கற்பனைகளோடு
தன்னந்தனியே பேசிக்கொண்டிருந்தாய் எனவும் தெரியும்..
எனை திட்டிக்கொண்டிருந்ததும்
விட்டுவிலகிவிட
எண்ணியதும்
கண்ணாடியில் முகம்பார்க்க பிடிக்காமல்
வெறுமனே கடந்துபோனதும் தெரியும்..
இறுதியாய் வராத எனக்காக
ஒரு கடிதத்தை எழுத நினைத்து..
ஏதோ எழுதி..
காகிதத்தை கிழித்தழித்தும் தெரியும்..
நாளை விடியலில்
மிண்டும் எனக்காய் நீ
காத்திருப்பாய்
என்பதும் தெரியும்..
ஏனெனில்
உனை இயக்கிக்கொண்டுள்ளது
உன் காதல் அல்லவோ..
Rafiq