நமக்கு பயந்துபோய் தான் சு -வை ச -வா மாத்திட்டீங்கடி

நமக்கு பயந்துபோய் தான் 'சு'-வை 'ச'வா மாத்திட்டீங்கடி
~~~~~~~~~~~~~~~
என்னக்கா சொல்லற?
@@@@@@@
நம்ம ஆம்பளைங்க பாவம். செடிகொடில இருக்கிற சாத்தை உறிஞ்சி குடிச்சிட்டு உயிர் வாழறாங்க. பொண்ணுங்களான நமக்கு தினம் கொழுப்பு, புரதச் சத்துள்ள ரத்தம் (குருதி) வயிறுமுட்டக் குடிக்கிறோம்.
@@@@@
அதுக்கு நன்றிக் கடனாத்தானே நாம பல நோய்களை மனுசங்க உடம்பில ஏத்திவிடறோம்.
@@@@@@
நம்மள அழிக்க எவ்வளவோ செய்யறாங்க. உம் ஒன்னும் நடக்கல. ஒரு பெரிய நிதி நிறுவனம் பேரு 'மட்டம்'னு முடியும். 'மட்டம்'னா என்னடி?
@@@@@@@
மட்டம்னா 'மட்டமான'ன்னு அர்த்தம். நாம கடிச்சு கொதறிடுவோம்னு பயந்துபோய்த்தான்டி அவுங்களோட முதல் பாதி பேருள 'சு'னாவைச் சேக்காம 'ச'னாவை சேத்துட்டாங்க. நாஞ் சொல்லறது சரிதானே.
@@@@@@@
ஆமாம் அக்கா. அந்த பயம் இருக்கட்டும்.
பணக்காரன் ஏழைனு வித்தியாசம் இல்லாம எல்லாரும் நம்மளப் பாத்து பயப்படறாங்க அக்கா.

எழுதியவர் : மலர் (6-Jan-20, 9:47 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 98

மேலே