அந்தி வானுக்கு இன்று விடைபெறவே மனமில்லை

விடுமுறை முடித்து வந்த நிலவு
பிறை அழகில் வானில்
விடுதலையையே விரும்பும் சுதந்திரக் காற்று
இளவேனில் மலரிதழில்
விழிவிரிய மின்னல் கீற்று ஒளிர
இதழ்விரியும் புன்னகை அழகில் நீ
மொழி எடுத்து சொல்லெடுத்து முக்கனிச் சாறெடுத்து
புனையும் கவியழகில் நான்
எழிலெடுத்துவந்து நின்று பார்க்கும் அந்தி வானுக்கு
இன்று விடைபெறவே மனமில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-20, 10:45 pm)
பார்வை : 415

மேலே