புத்தகம் விரிந்தது போல்

புத்தகம் ஒன்றுவிரிந் தற்போலும் பூவிதழ்
புத்தகம் ஒன்றெ ழுதுவதுபோல் கண்ணசையும்
புத்தகம்வா சிக்கும் (அ)னுபவம் உனதெழில்
புத்தகமே உன்மொழியா தோ

மொழியாகேள் யாதும்ஊ ரேயா வரும்கேளிர்
என்றபூங் குன்றன் வழி

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jan-20, 10:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே