சாமுத்திரிகா பட்டுடுத்திய சேலத்து மாங்கனிச் சேலைக்காரி

தோட்டத்தைத் தவிர்த்து உன்னெழில் கூந்தலில்
ஆட்டம் போடுதே தென்றல் ஏனோ ?
வாட்டமிலா வட்டமுக திங்கள் அழகியே
தோட்டத்துக் கரும்புச்சுவை உன் செவ்விதழ் தானோ ?
பொங்கல் புத்தரிசிபோல் சிரித்தது போதும்
சங்கத் தமிழ் ஒன்றில் சிரியாயோ ?
தங்க அங்கத்தில் சாமுத்திரிகா பட்டுடுத்திய சேலத்து மாங்கனிச் சேலைக்காரி !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-20, 9:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே