அவள் இன்றி இயற்கையும் இல்லை

காற்று உயிரில்
வண்ணக் கூதல்
கீறுகிறேன் வா என்கிறது....

மழை மெல்லிய
பனிக் குரலால்
காதல் பாடலாகுவோம்
வா என்கிறது....

நிலா என் முதுகில்
அமரு சுவர்க்க உலா
போகலாம் என்கிறது...

பூக்கள் இளமைக்கு
தேன் கொட்டி...
ஆயுளுக்கும் வாசம் தீட்டலாம்
ஒரு வார்த்தை சொல் என்கிறது...

நானோ சற்று நகருங்கள்
என் தனிமை எங்கே????
(இஷான்)

எழுதியவர் : இஷான் (23-Jan-20, 9:41 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 278

மேலே