காதல் கனவு

கனவு தூங்கும் நேரம்
ஒரு கவிதை எழுதிவைத்தேன்
அந்தக் கவிதை வரியைப் படிக்க
ஒரு காதல் தேவதை வந்தாள்
**
படித்துப் பார்த்த அவளோ அது
பிடித்துப் போன தென்றாள்
பிடித்துப் போன தாலே கைப்
பிடித்துக் கூடிச் சென்றாள்
கூட்டிச் சென்ற அவளோ நெஞ்சக்
கூட்டி லடைத்து வைத்தாள்
கூட்டி லடைந்த கவிதை என்
கோவில் தெய்வம் என்றாள்
**
தெய்வ மான கவிதை ஒரு
தேரில் ஏறக் கண்டேன்
தேரில் ஏறி நின்ற அதன்
திருவிழாவும் கண்டேன்
கண்ட காட்சி சொல்ல நான்
கனவை எழுப்பிப் பார்த்தேன்
கனவும் தூக்கம் கலைந்து அதை
கனவு காண கண்டேன்.
**
*சும்மா ஒரு பாடல்போல..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Jan-20, 1:24 am)
Tanglish : kaadhal kanavu
பார்வை : 240

மேலே