தேடலும் சுவையும்

பனிப்பாறைகள்
உருகி
நீரருவியாய்
பாய்ந்து
கொட்டும்
பரிசுத்த
நீருக்கும்
நிலத்தை
தோண்டி
நீரூற்றுக் கண்டு
இறைத்து
எடுக்கும்
நீருக்கும்
வேறுபாடு
நீரிலில்லை
அதனைப்
பெறும் வழியிலேயே
உண்டு
இவ்வாறுதான்
வாழ்வின்
எல்லாப்
பக்கங்களும்
எல்லோருடைய
நோக்கமும்
ஒன்றுதான்
ஆனாலும்
அதைப் பெறும்
வழிகள்தான்
வெவ்வேறு
சிலருக்கு
இலகுவாக
கிடைக்கும்
பக்கங்கள்
வேறு சிலருக்கு
கடின உழைப்பில்
கிடைக்கின்றது!
கடின உழைப்பில்
பெற்றது
கசந்து விட
காலமெடுப்பதைப்போல்
இலகு வழியில்
பெற்றவை
இலகுவிலேயே
சுவையுமற்றுப்
போய்விடும்

எழுதியவர் : யோகராணி கணேசன் (26-Jan-20, 11:13 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : thEDalum suvaiyum
பார்வை : 271

மேலே