உன் கனவு வரும் வரை
உன் கனவு வரும் வரை..
===============================================ருத்ரா
இரவு என்பது
இறவு தான் எனக்கு
உன் கனவு வரும் வரை..
அதில்
உன் கண்கள் என்னை
வருடும் வரை...
உன் இதயம்
என் இதயம்
எனும் வித்தியாசங்கள்
மறையும் வரை..
இரவு என்பது
இறவு தான் எனக்கு.
=============================================