கனவுகளின் பிரதிவிம்பம்
உன் மன ஆழத்தில் பதிந்துவிட்ட
கனவுகளை யாரும் கலைத்துவிட
முடியாது நீ விரும்பினால்தவிர;
உறுதியாக்கப்பட்ட கனவுகளுக்கு
உயிரிருக்கும் அது நனவாகும்வரை
என்றோ கண்ட கனவு
நீ எதிர்பாராமலேயே நிஜமாகும்போது
ஆத்மா ஒரு கணம் ஷ்தம்பித்துவிடுகிறது
அப்போ எதற்காக ஏமாற்றம்,இழப்பு;
பலமற்ற அத்திவாரத்தைப்போல்
உறுதியற்று தளம்பும் கனவுகள்
நிர்மூலமாக்கப்பட்டு விடுகிறது;
விட்டுக்கொடுத்தல் என்ற பெயரில்
அல்லது நீறு பூத்த தணலான சூழ்ச்சிகளால்
இயற்கையோடு பேசும் சக்தி மனிதருக்குண்டு
இவ்வாறுதான் ஞானிகளின் உருவாக்கம்
ஒன்றை திரும்பத் திரும்ப கேட்டுப்பாருங்கள்
ஒரு நாள் அது உங்கள் முன் காட்சி கொடுக்கும்
ஆனால் அது நிலையாகிவிடுமா என்ற சந்தேகம்!
ஆழ்மனதிலிருந்து எழுபவை நிட்சயம் நிலைத்து நிற்கும்
கால ஓட்டத்தில்கூட அவை கலைந்துவிடுவதில்லை
கனவுகளை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்
உள்ளிருந்து ஒரு ஆத்மா ஒரு ஓரமாக
எப்பொழுதும் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கட்டும்;
முயற்சியில் தீவிரமாக வெற்றிநடை போடுங்கள்
கனவின் பிரதிவிம்பம் அந்தோ தொலைவிலில்லை!