பரமரகசியம் 6

பரமரகசியம் 6


மனித உடல் அழியாதிருக்க அகத்திய பரிபாஷை மூறாம் காண்டத்தில் 58 வது பாடலில்
கேளையா கயமது வச்சிரமாகுங்

கிருபையும் வல்லாரை கற்பங் கொண்டால்
ஆளையா மண்டலத்தில் சா வுபோச்சி
அறைவரிய சட்டைத்தள்ளிப் பூர்வமாச்சு
யேலையா சிவசக்தி தேகமாச்சு
எப்போதும் வச்சிரமா யிருக்கும்பாரு
கோளே து வாராது நான்சொல் வாக்கியங்
கொண்டவனே மெய் ஞான குணமுள்ளோன்

அகத்தியர் சொல்வதாவது காயகற்பம் சாப்பிட்டால் தேகம் வைரம் போலாகி உடலுக்கு
சாவே வராது. உடல் என்றும் நிலைத்திருக்கும் என்கிறார்.. உடல் ஏன் நிலைக்க வேண்டும்
நாமும் சித்தனாக சிவனாகவெபரமரகசியம் 7

பிண்டம்

முன்பு அண்டம் என்னவென்று பார்த்தோம் இப்போது பிண்டத்திற்கு வருவோம்.
பிண்டம் பளுவானது அல்ல சாரம் அல்ல பயனுள்ள பொருளல்ல பெண்ணல்ல
பெண் பெற்ற பிள்ளை யல்ல குழந்தைக் கருவல்ல கு, குழந்தை யுமல்ல பெண்கள்
வீட்டுத்தூரம் என்கிற ரத்தமுமில்லை சிப்பியில்லை பூமியில்லை ஜீவா செந்துமில்லை
போதைத்ரும் மதுவல்ல மனிதர் கழிக்கும் மலமல்ல vagaiyait இன்னதென்ரல் இதுவும்
பஞ்ச பூதத்தின் சரக்கு..பலசித்தரும் பிண்டத்தை மேலே சொன்ன பெயர்களை வைத்து
மற்றவர் yherinthut கொள்ளாத படிக்கு அவரவர் இஷ்டம்போல் பெயர் வைத்துக் கொண்டார்கள்
அந்தந்த குருக்களின் சீடர்களே இதை அறிந்திருப்பார்கள்.

திருவள்ளுவர் இந்த பிண்டம் என்ற சக்தியுப்பை மலம் என்ற பரிபாஷை ப் பெயரில்அழைத்தார்.
இதேபோல் சுத்த ஜலத்தை மூத்திரம் அமுறி சிறுநீர் என்றெல்லாம் மக்கள்
தெரியாவன்னமும் அவர்கள் அருவறுப்பு கொள்ளும் பெயர்களைத் தேர்வு செய்து
பேசினார்கள். ஆனால் ஆராய்ந்து தெரிந்துகொண்டவர். அகத்தியர் வள்ளுவர் சித்தர்கள்
போன்றோர் மலம் சிறுநீர் அருந்தமாட்டார்கள் என்று தெளிநது இதை ஆராய முற்படுவோர்.


பாரப்பா பிண்டத்தைச் சொல்லவென்றார்
பாரமில்லை சாரமில்லை பயனோயில்லை
பெறப்பா பெண்ணுமில்லை பெண்ணாள்பெற்ற
பிள்ளையில்லை கருவில்லை சிசுவில்லை
கூரப்பா மங்கையர்கள் தூரமான
குருதியில்லை கும்பிடுகல் பூமி யில்லை
பாரப்பா பலசீவ செந்துமில்லை
மதுவில்லை மலமில்லை வகையாகக் கேளே

(அகத்தியர் முப்பு வகார சூஸ்திரம்)


கொத்தான எட்டிரண்டும் சேர்கிழங்கு
கூட்டியல்லோ பத்தான திதுதான்மார்கம்
உத்தான பணிகுடநீர் அதினாலாச்சு. (அகத்தியர்)

கருங்குருவைத்தான் சமைத்துக்
காடி வைக்கச் சுத்த ஜலம்
அரிகுரு விதாச்சு தானாண்டே

(திருவள்ளுவர் நவரத்தினாய்ந்தாமணி 800)

எழுதியவர் : பழனிராஜன் (27-Jan-20, 8:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே