பரமரகசியம் 7

பரமரகசியம் 7

எட்டும் இரண்டும் பத்தாம்

சித்திபெற சிவசக்தி இரண்டுங் கூ டி ற்
சிவசிவா சகலசித்துந் சிக்குந்தானே
அத்தனென்றும் எட்டுடனே இரண்டும் கூட்டில்
அவனியுயிர் உடலாகும் யகாரம் பத்தே


விந்துவுடன் நாதமதுட் மேவியே நங்கையோடு
சுந்தர ஆகாச சமாதியில் தோன்றிவரும்- - - அந்தவுப்பு
முப்புவென்றே யறிவார் பூதலத்திலே தெளிந்தோர்
அப்பு முப்பு மொன்றானதால்

(திருவள்ளுவர் பஞ்சரெத்தினம் 500)
சித்தர்களின் பழமொழி களில் இதுவும் ஒன்று. . அவர் கள் சொல்லுவது உன்னிடம் யாராவது
வந்து தன்னை சித்தன் என்று சொல்லிக்கொண் டால் அவர்களைப்பார்த்து நீ கேட்கவேண்டிய
கேள்விகள் இதுதானென்று சொல்லுகிறார்கள். எட்டு என்றால் என்ன ?இரண்டு என்றால் என்ன?
சாகாக் கால் எது வேகாத்தலை எது போகாப்புணல் என்றால் என்ன? இவைகளுக்கு பதில்
சரியாக சொன்னால் அவனிடம் நீ பேசு அப்படி அவன் சரியாக சொல்லா மல் தவறாக சொன்னால்
அவன் அண்டப் புளுகன் அவனிடம் பேசாதே என்கிறார்கள்.
அத்தன் எட்டாம் அகார உப்பு (சிவ உப்பு) இரண்டு உகார உப்பு உ் (சக்தியுப்பு) இது

இரண்டும் கூட்ட10 ஆகும். ஆக சிவசக்தி கூடிடில் பத்தென்பர் . எட்டு உயிராம் உ் உடலாம்
இரண்டும் ய யாகரமென்ற பரம்பொருளே. சிவன் விந்து சக்தி நாதமே றும் சொல்லுவார்.
இந்த இரண்டும் சேர்ந்ததே ஆகாச சமாதியிலிருந்து வரும் உப்பு அதுவே முப்பு ஆகும்..
அது அப்பு என்கிற தண்ணீரே உப்பு என்கிறார். இதிலிருந்து இந்தத் தண்ணீர் வேறு என்பது
விளங்கும். இது தான் பரமரகசியங்களாக சித்தர்கள் பாது காத்து வருகிறார்கள்.
வள்ளுவரும் மறைத்தது சுத்தஜலம் கள்ளு விந்தமுரி என்கிறார்.

சித்தர்கள் முடிந்த வரையிலும் தங்கள் எல்லா நூல்களிலும் முயன்று இதை வெளிவிட பல
குறிப்புகளாக உணர்த்து வார்கள். ஆனால் யாரும் கொள்ளுதல் கடினம்

தொடரும்

எழுதியவர் : பழனிராஜன் (27-Jan-20, 10:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 94

மேலே