26

குடியரசு தின நாள்...
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தேழில்
பிறந்த சுதந்திரக் குழந்தை
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதில்
சுயமாய்த் தானே நின்று
நிமிர்ந்த நன்னாள்...

பிரிட்டிஷ் மகுடம் இறங்கியது
ஆயிரத்து தொள்ளாயிரத்து
நாற்பத்து ஏழில்...
இந்திய அன்னை
மகுடம் சூடிக்கொண்டாள்
ஆயிரத்து தொள்ளாயிரத்து
ஐம்பதின் ஆரம்பத்தில்..

பண்பாடு கலாச்சாரம்
இவற்றில் பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
வல்லரசான இந்தியா
ராணுவ பலத்திலும்
பொருளாதார வளர்ச்சியிலும்
வல்லரசு நிலை காணும்
அளவுகோலைத் தொடத்
தூண்டும் நாள்
இந்த குடியரசு தினநாள்...

மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
சுபாஷ் சந்திரபோஸ்
வல்லபாய் பட்டேல்
அம்பேத்கார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மகாகவி பாரதியார்
கப்பலோட்டிய தமிழர் வஉசி
வீரன் வாஞ்சிநாதன்
பெருந்தலைவர் காமராஜர்
இன்னும் எண்ணற்ற தலைவர்கள்
விடுதலை வீரர்களின்
வீரதீரங்கள் தியாகங்கள்
ஒவ்வொரு இந்திய மனதிலும்
வந்து போகட்டும்...
வேற்றுமை உணர்வுகள் அதில்
வெந்து போகட்டும்...

எழுபத்தொன்றாவது
குடியரசுத் திருநாள்...
கணக்கு தீர்க்கும் நாளல்ல இது..
கணக்கு பார்க்கும் நாள்...

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதில்
இந்தியா குடியரசாகியது...
ஒட்டுமொத்த தேசம்
தன்னைத்தானே அழகு
படுத்திக் கொண்டது...

முப்பது கோடி முகமுடையாள்
எனப்பாடிய பாரதியார்
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றும் பாடினார்...
நூற்று முப்பது கோடி மக்கள்தொகை
தாண்டியும் இந்தியா
உணவுப் பொருள் உற்பத்தியில்
பெற்றுள்ளது தன்னிறைவு..
இதில் தெரிகிறது
இந்தியாவின் மகிழ்ச்சி...
இதன் பின்னால் இருக்கிறது
விவசாய வளர்ச்சி
தொழில்நுட்பப் புரட்சி...

விவசாயம்
உணவுப்பொருள் பதனிடுதல்
ஆகியவற்றில் வளரட்டும் இந்தியா...

கல்வி சுகாதாரத்தில்
இன்னும் வளர்ச்சி
காணட்டும் இந்தியா...

மின் உற்பத்தியில்
தன்னிறைவடையட்டும்
தன்னிகரில்லா இந்தியா...

தகவல் தொழில்நுட்பம்
கணினிப் பொறியியல்
தொழில்கள் தொழிற்சாலைகளில்
பலம் பெறட்டும்
பண்பாடு சிறந்த இந்தியா...

ராணுவ பலத்தில்
விஞ்ஞான வளர்ச்சியில்
வானமே எல்லையாகட்டும்...
அனுப்பிய முதல் முறையிலேயே
செவ்வாய்க் கிரகத்தின்
உயரம் தொட்ட
செயற்கைக்கோள் இந்தியாவினுடையது...
இந்தியா இதற்கு மேலும்
உயரமுடையது...

இந்தியர் ஒவ்வொருவரின்
பங்களிப்பில் இருக்கிறது
வல்லரசு இந்தியா...

நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
எனக் கேள்விகள் கேட்பது எதற்கு...
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு...

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்...

இஸ்லாமியர் மசூதியில்
புரோகிதர் மந்திரம் ஓத
இந்து மணமக்களின் திருமணம்..
இனிதே நடந்தேறியது...
இந்து முஸ்லிம் கிறித்தவர்
சேர்ந்து அமர்ந்து உண்கிறார்கள்
திருமண விருந்து...
இதுதான் இந்திய கலாச்சாரம்...
உலக ஒற்றுமைக்கு
இதுவே அச்சாரம்...
நெஞ்சு இனிக்கிறது இதனை
நினைக்கும் போதெல்லாம்...

நாடு நம்மால் வளரட்டும்...
நாம் நாடால் வளர்வோம்...
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...
அனைவருக்கும்
குடியரசு தின வாழ்த்து...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்...
👍🙋🏻‍♂🙏💐🌹😀👏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (27-Jan-20, 11:05 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 116

மேலே