நீயே விழு நீயே எழுந்திரு

நீயே விழு, நீயே எழுந்திரு!!

ஓ இளைஞனே!
உன் வாழ்க்கை உன் கையில்
ஐம்பது வயது கடந்த சில அறிவு ஜீவிகள்,
அறிவுரை என்ற பேரில்
உன்னை அழிக்க பார்ப்பார்கள்.
அலைகழிப்பார்கள்.
மிறளாதே, எதிர்காலத்தை என்னி
பயந்துவிடாதே
அவர்களின் அனுபவங்களில்
மயங்கியும் விடாதே.
வயதுக்கும், அனுபவத்துக்கும் மதிப்பளித்து அனைத்தையும் கேள்.
மற்றபடி, இடது காதில் வாங்கி வலது காதில் அதை விட்டுவிடு.
உன்னைவிட, நீ!
முன்னேற ஆசை படுகிறவன்
இந்த உலகில் வேறு யாராக
இருக்க முடியும்.
தயவு செய்து யாரையும்
பின் பற்றாதே.
யாரையும் பார்த்து பிரம்மிக்காதே.
உனக்கு நீயே எஜமான்
உனக்கு நீயே வேலைக்காரன்
உன்னுடைய பிறப்புக்கு நீயே அர்த்தம் கற்பிக்க வேண்டும்.
உனக்கு எது வருமோ அதை சிறப்பாக செய்.
உனக்கு எது பிடிக்குமோ
அதை ஆசையுடன் பழகு.
மற்றவர்களை நம்பாதே
யார் கரத்தையும் பற்ற நினைக்காதே
உன்னை நம்பு
இவ் உலகை வென்றெடு.
- பாலு!!

எழுதியவர் : பாலு (26-Jan-20, 5:55 pm)
சேர்த்தது : balu
பார்வை : 262

மேலே