நட்பு
வார்த்தையில் கூட நம்மை வலிக்கவிடாது காப்பது நட்பு ;
வாழ்க்கையில் நம்மை வழுக்கவிடாது காப்பதும் நட்பு ;
மழையில் நனைகையில் குடையாய் கூடவரும்;
வெயிலில் நடக்கையில் நிழலாய் தொடர்ந்து வரும்;
உண்மையின் உருவாய்
உயிரின் வலிமையாய்
இருளின் ஒளியாய்
நம்மை வாழ்விக்க உடன் வாழ்வதுவே நட்பு ;