என் அப்பா
என் அப்பா 🙏🏽
குழந்தையாக இருந்தபோது
என்னை மிகவும்
கொஞ்சிய விளையாடிய
என் அப்பா.
மாணவன் பருவத்தில்
மிகவும் கண்டிப்புடன்
என்னை நடத்திய
என் அப்பா.
கல்லூரி படிக்கும் போது
எனக்கு எதிரி, வில்லன்,
உலகத்திலேயே பிடிக்காத
ஒரு ஆண்
என் அப்பா.
வேலை கிடைத்தவுடன்
சாதித்த திமிரில் நான்.
மெளனத்தை கடைபிடித்து
அமைதி காத்தவர்
என் அப்பா
கல்யாண ஆனது.
வாழ்க்கை எப்படி ஓட்டுவது.
பதட்டத்தில் நான்
எந்த ஒரு அச்சமில்லாமல்
என் அப்பா.
வீடு ஒன்று விலைக்கு வர,
வாங்க ஆசை.
வங்கி கடன் பெறலாமா, வேண்டாமா.
என் மனைவியிடம் சொல்லி அப்பாவிடம் சொல்ல சொன்னேன்.
முன் காலை பின் வைக்காதே
என்று சொன்னாராம்
என் அப்பா.
வீடு வாங்கும் முன் நீங்க
பார்த்து ஒரு வார்த்தை
சொன்னா நல்லா இருக்கும், அம்மா சிபாரிசு செய்ய
என்னுடன் வீடு காண வந்த
என் அப்பா.
வீடு நல்லா இருக்குடா
சீக்கிரம் வாங்கிவிடு
என்று பல வருடங்கள் கழித்து
என்னிடம் பேசினார்
என் அப்பா.
வங்கி கடன் வாங்க கிளம்பிய என்னை
இருடா, ஒரு நிமிடம் இரு...
அலமாரியை திறந்து
கட்டாக பணம் எடுத்து
இதில், நீ வீடு விலை பேசின பணம் இருக்கு
நல்லா சந்தோஷமா வீடு வாங்கு என்ன, என்று சொன்னார்
என் அப்பா.
கண்களில் கண்ணீர்
மழை என கொட்ட
உள்ளம் முழுவதும் குற்றவுணர்வின் உச்சத்துக்கு சென்ற நான்
அப்பாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து
உங்கள போய் ரொம்ப கம்மியா
இவ்வளவு நாள் ஏடை போட்டுட்டேன்
என்னை மண்ணித்து...
எழுந்திரு... என்ன இது...
குழந்தை மாதிரி
சமாதான படுத்தினார்
என் அப்பா.
அப்பாவின் அருமையை
உணர்த்திய அந்த தெய்வம்.
என்னதிரே இப்போது விஸ்வரூபம் எடுத்து மிக உயரமாக தெரிந்தார்.
உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஆண்
என் அப்பா.
- பாலு.