முதல் முத்தம்
முதல் முத்தம்
காதல் கொண்ட நாங்கள் இருவரும்
முதன் முதலாய் சந்திக்கின்ற வேளை இது
இதயம் இரண்டும் இடி முழங்க
கண் இமை இரண்டும் காதல் கீதம் இசைக்க
ஒரு கை கொண்டு
அவளது சிறுத்த இடையை இருக்கி பிடிக்க
மற்றொரு கை கொண்டு
அவளது கலைந்த கூந்தலை கட்டுக்குள் வைக்க
பருவக்காதலர்களது மூச்சு காற்று இரண்டும்
பாலைவனக்காற்றாய் மாற
சிறு இதயங்களுக்கு சுவாசிக்க காற்றில்லாமல்
போனது போல் பெருமூச்சு உருவாக
மென்மையான இதழ்கள் நான்கும்
இணைந்து எழுதுகிறது ஒரு காதல் கவிதையை
"ஆண்மை தேடிய வன்மையும்
பெண்மை தேடிய மென்மையும்
சமமாய் பங்கிட்டு கொண்டன
எங்களது முதல் முத்தத்தை"
_கலை