காதலர் தினம் - காதல் கவிதை

காணமிடமெங்கும்
காதல் நிறையட்டும்
காலநேரமின்றி காதல் பொழியட்டும்
உள்ளம் ஒன்றுகூடி
இன்பம் கண்டு நாளும்
கன்னித்தமிழ் அதுபோல்
காதல் வளரட்டும்..
காலம்பல மாறும்
காதல் மாறாதே
காதலர் வேறானாலும்
காதல்தான் வேரே..
கண்கள்வழி கடந்து
கரங்களிடை நுழைந்து
இதழ்களுடன் இணையும் இன்பக்காதலே

Rafiq

எழுதியவர் : Rafiq (14-Feb-20, 8:53 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 240

மேலே