வன்முறையை நாங்கள் கைய்யில் எடுத்தால்

வன்முறை காட்டும் மிருகமே

வலியின் கொடுமையை உன்

தாயிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்

அவளும் கிழிபட்டவள்தான் நீ
தந்த வலியில்

வலிதருவது உங்கள் வாடிக்கை
அதை

வசை பாடவில்லை நாங்கள்
இசைபாடும்

வாய்ப்பாய் மாற்றிக் கொள்கிறோம்

எங்கள் முறைக்கு வன்முறையை

நாங்கள் கைய்யில் எடுத்தால்

எழுதியவர் : நா.சேகர் (22-Feb-20, 7:18 am)
பார்வை : 396

மேலே