வினோத சந்தேகம்
நித்திரை சரிவர இல்லை
என்றவனுக்கு
மாத்திரை ஒன்றெழுதி
கொடுத்தார் மருத்துவர்;
மாத்திரை ஒன்றெடுத்தும்
தூக்கம் இல்லையெனில்
என்ன செய்வது?
வினவினான் நோயாளி;
இரண்டு மாத்திரைகள்
எடுத்துக்கொள்
பரவாயில்லை
என்றார் மருத்துவர்;
இரண்டு மாத்திரைகள்
தின்றால் தூக்கம்
வருமென்றால்
பத்து மாத்திரைகள்
எடுத்தால்
என்னவாகுமென்றான்
விசித்திரமாய் மீன்டுமவன்;
சற்று அமைதிகாத்த
மருத்துவர்
பின் அவன் காதருகில்
சென்று மெல்லியதாய்
கூறினார்...,
'இரண்டு மாத்திரைகள்
எடுத்தால் தூக்கம் வரும்
பத்து மாத்திரைகள்
எடுத்தால்
தூக்க ஆள் வரும்'
என்று...;