உனைக் கண்டதும் எனை நான் மறந்தேன்
பொட்டுவைத்த வான்நிலா
கட்டழகு வழியும் காட்டாறு
இடைமுல்லைக் கொடி வளைய
கற்றைக் குழல் காற்றசைய
அன்னமாய் நடந்து வந்தாள்
மனதைக் கவ்வியது மலர் வாசம்
சிந்தை திரும்பியது அவள் வசம்
விழி உறையிலிருந்து
பார்வை வாளை உருவி
வசீகர மூலிகை
மேலும்கீழும் தடவி
நேராய் என் நெஞ்சைப்
பார்த்துக் குத்தினாள்
போதை மயக்கம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை ஆட்கொள்வதை
நான் முழுவதும் உணர்ந்தேன்
அஷ்றப் அலி