ஏக்கம்
இதயம் எந்த அளவுக்கு
பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ....
அந்த அளவுக்கு அவர்களிடம்
அன்பை எதிர்பார்க்கும்....
ஆனால்
சில கண்ணீர்களுக்கு மட்டும்தான்
இங்கு
விரல்கள் கிடைக்கின்றன...
பெரும்பாலானவை
தரைக்கும் தலையணைக்குமே சொந்தம்.....
துடிக்கின்ற இதயங்களைவிட
நடிக்கின்ற இதயங்களே
இங்கு அதிகம்...
நண்பா அன்புக்கு மட்டும்
அடிமை
ஆகிவிடாதே ஒருபோதும்
அது
உன்னால் தாங்க முடியாது.....