இது உனக்காக

நான் மறைக்க முயலவில்லை
தெளிவுபடுத்தியே சொல்கிறேன்
நிச்சயமாக
இது உனக்காகத்தான்..
ஒவ்வொரு முறை நாம் சந்திக்கும்போதும்
நாம் புதிதாய்த்தான் உணர்கிறோம்
ஒருவேளை
இதனை நான் மட்டுமே உணர்வேனென்றால்
ஆம்
உண்மையில் நீ அதிர்ஷ்டசாலி
காலத்தின் கருணை உன்மேலிருக்கிறது என இன்பம் கொள்.
உன் பிடிவாதத்திலும் பேரன்பிலும்
எனை தொலைத்துவிட்டுத்தேடுவதை
வாடிக்கையாகவே வைத்துக்கொண்டுள்ளேன்
வெகுசில நேரங்களில் மட்டுமே என்மேல் நீ கருணை கொள்கிறாய்
அப்போது
வானத்தை அளக்கும் பறவையாய் உருமாறும் அதிசயம் நடக்கிறது
உனைவிட இவ்வளவு சிறப்பாய்
வேறு யாரும் வதைத்திட முடியாது..
மறைப்பதற்கு ஒன்றுமேயில்லை
நிதர்சனமாகவே சொல்கிறேன்
இது உனக்காகத்தான்

Rafiq

எழுதியவர் : Rafiq (26-Feb-20, 4:36 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : ithu unakaaga
பார்வை : 403

மேலே