முடக்கி வைத்த செங்குருதி
இன்னும் உயிர் பிழைத்து கொண்டு தான் இருக்கிறது
இந்த சாதி...
அன்றைக்கும் இன்றைக்கும் வெறும் உடைகள் மட்டும் தான் மறுவியுள்ளது
எண்ணங்களும் முடிவுகளும் பழையபடியே...
சாதி,
வீடுகளில் அடையாளமாய்,
மனித பேய்களுக்கு குருதியாய்,
வேலைகளுக்கு முன்னுரிமையாய்,
வாகனங்களில் விளம்பரமாய்,
பெயருக்கு பின் அடைமொழியாய்,
அரசியலில் அசையா தூணாய்,
கரங்களில் தோறும் கயிறாய்,
பெரியாருக்கு மட்டும் துச்சமாய் ,
இன்னும் உயிர் பிழைத்துக்கொண்டு தான் இருக்கிறது...
சாதி வேற்றுமை இன்னுமா இருக்கிறது என்று
பலருக்கும் ஆச்சர்யப்படும் வகையில் மிக
மௌனமாய் நடந்துகொண்டிருக்கிறது இந்த சாதி வேற்றுமை
கல்வியிலும் மருத்துவத்திலும் நுழையவே கூடாத இந்த பிணி
இன்று எல்லா துறைகளையும் நோயாளியாகி முடக்கிவிட்டது ...
சாதி பிடித்த மனிதர்கள் இல்லை இல்லை மிருகங்களுக்கு
முன் வைக்கும் முதற்கேள்வி
அடுத்தவன் சுவாசித்த காற்றென்று அதை சுவாசிக்காமலா இருக்கீர்கள்??
இதை ஏன் நீ இங்கு வந்து கேட்கிறாய் என்றால்,
மேதைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுவிடும் தலைப்பு சாதி என்றுரைத்த மறுகணமே...
வெறும் வார்த்தையாய் அல்லாமல்
கொதித்துக்கொண்டிருக்கும் செங்குருதியை
எழுத்து வழியே ஊற்றுகிறேன் ,
எதிர்கால நரம்புகளுக்கு.......