ஒருதலை காதல்
மாயாவியோ ? பேரழகியோ ?
இது காதலோ ? காமமோ ?
தேவதைகளின் தேவதையே
என்னுள் அம்பு எய்தவளே
அது நீயே !
நானாக நான் உன்னில் காண்கிறேன்
அதனால் நா நியோ ?
உன் விழிகள் நடத்தும் போராட்டத்தில்
காதலின் பேரழிவை உணர்கிறேன் என்னுள்
மூச்சை இழந்து மொழிகளை மறந்து
உயிருள்ள பிணமாக உறைகிறேன்
நீ என்னை கடந்து செல்லும் நொடிகளில்
உன் உதட்டில் இருக்கும் வார்த்தைகள்
சிதறும் போது ஏங்குகிறேன்
அதில் கலந்த காற்றினை கையில் அடைக்க
ஏக்கத்தின் ஏக்கத்தை உணர்கிறேன்
உன் முன் ஒருதலை காதலனாக
என்றும் என்னடி மாயாவி நீ .