என் வலியின் ஒலி

சிரிப்பு சூழ்ந்திருந்த இடத்தில்
இப்பொழுது இருள் சூழ்ந்திருக்கிறது
கைகோர்த்த கரங்கள் எல்லாம்
கை விலகி செல்லும் நேரத்தில்
நிலா வெளிச்சத்தின் ஓரத்தில்
என் வலியின் ஒலியை உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லையோ
ஆராரோ சத்தத்திற்கு பின்னால்
நீ யாரோ என்னும் அர்த்தத்தை உணர்கிறேன்
உணர வைத்த உனக்கு
என்ன செய்ய போகிறேன் என்று குழம்புகிறேன்
என் கண்ணீர் துளியை துடைக்க
உன் கரங்கள் வரும் என ஏங்குகிறேன்
நினைவில் வந்து சென்றாய் காற்றை போல
உனது கைக்குள் எனது கைகளை கோர்த்து
நீ காட்டிய அழகான உலகம்
இன்று என்னை பார்த்து சிரிக்கிறது அன்பின் விளைவை கண்டு
புண்ணியம் செய்திருப்பேனோ என சிந்திக்க தூண்டிய உன் உறவு
பாவத்தின் உருவம் நானோ என சிந்திக்க தூண்டுகிறது
பார்வை வேண்டாம் என நினைக்கிறன் உன்னை
யாரோ போல் பார்க்கும் நிமிடங்களில் ...
கைகள் வேண்டாம் என நினைக்கிறன் உன்
கரங்களை சேர முடியாத நிமிடங்களில் ...
செவிகள் வேண்டாம் என நினைக்கிறன் உன்
மொழிகளை கேட்காத நிமிடங்களில் ...
என் உணர்வை இழக்கிறேன்
உன் உறவை இழந்த பிறகு
இன்றும் நடக்கிறேன் ஒரு உயிருள்ள பிணமாக ...

- வார்த்தைகளில் சொல்ல முடியாத
என்னால் சில வரிகளில்

எழுதியவர் : நிழலின் ஓவியம் (27-Feb-20, 10:09 am)
பார்வை : 101

மேலே