என்னவன்

உன்னைப்பற்றி எழுதும் என் எழுத்தாணிக்கு
தெரியும் என் காதலின் ஆழம்
உன் இரு விழிகளை கண்டு தொலைந்த என்னை
உன் இதயத்தில் கண்டுபிடித்த - அந்நொடி
ஓர் குழந்தையாக தத்தளித்த என்னை
உன் கைகளில் தாங்கிய - அந்நொடி
துக்கத்தில் சிதறிய என் இதயத்தை
அன்புக்கரங்களால் நீ கோர்த்த - அந்நொடி
தோல்வியிலும் என்னை வீழவிடாமல்
வெற்றியிலும் என்னை ஆட விடாமல் கொண்டு சென்ற - அந்நொடி
காதலின் உண்மையில் அரிச்சந்திரனை மிஞ்சிய - அந்நொடி
அன்பை அள்ளி தருவதில் கர்ணனை மிஞ்சிய - அந்நொடி
அந்நொடி ! அவ்வொரு நொடி !!
இறுதியில் அது கொண்டு சென்ற அந்நொடி - " திருமணம்"

- அது மரண படுக்கையிலும் மறக்காது
என்னவனே

எழுதியவர் : நிழலின் ஓவியம் (27-Feb-20, 10:24 am)
Tanglish : ennavan
பார்வை : 233

மேலே