தலைவர்
ரஜினிகாந்த் நிதி உதவிகள் செய்யாதவர் மனிதாபிமானம் இல்லாதவர் என்று யார் சொன்னது
3000 கோடிரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை ஏழை மக்களுக்காக ஒப்படைத்தவர் ரஜினி
பாலம் கட்டுவதற்காக தனது சொத்து அரண்மனை ஆகியவற்றை கொடுத்து விட்டு குடிசை வீட்டில் விறகு அடுப்பில் அப்பளம் சுட்டவர் ரஜினி
தனது வீட்டையே எதிரிகள் பிடுங்கி கொண்ட பின்பும் தன்னிடமிருந்த கிரானைட் மலையை உடைத்து அதன் மூலம் பணக்காரனாகி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தவர் ரஜினி
தனது சொத்துக்களை எல்லாம் மாற்றான் பேரில் எழுதி வைத்துவிட்டு சொந்த வீட்டிலேயே வேலைக்காரனாக இருந்தவர் ரஜினி
ஒரு பெண்ணின் உடலிலிருந்த ஆவியை விரட்ட தனது உயிரை பணயம் வைத்தவர் ரஜினி
மும்பை வாழ் தமிழ் மக்களுக்கு பாதுகாவலனாய் இருந்தவர் ரஜினி
தம்பிகள் செய்த கொலைக்காக தண்டனையை அனுபவித்த தர்மதுரை ரஜினி
இப்படி
இப்படி என சொல்லி கொண்டே போகலாம் ரஜினியின் புகழை...
ஆனால் இவற்றையெல்லாம் அவர் சினிமாவில் செய்தார்...
நிஜத்தில் செய்ய அவர் என்ன நம் நாட்டு மக்களை போல ஏமாளியா...