உன் வாா்த்தைகள்
என்னங்க..
இப்ப எதுக்கு டீவி சேனலை மாத்தீனிங்க...?
நான் நிம்மதியா ஒரு நாடகம் கூட பாா்க்க கூடாதா..
இந்த வீட்ல...?
இதே நான் பொறந்த வீடா இருந்தா...
எம்மா தாயே...
ஒரு நிமிஷம்...
அதுக்குள்ள பொறந்தவீட்டுப் புராணத்துக்கு போயிடாதா...
நியூஸ் பாா்த்துட்டு...
சேனலை மாத்தி வைக்கிற..
நாலு நல்ல விசயத்தை தெரிஞ்சிக்கிட்டத்தா...
அறிவு வளரும்...
அது எனக்கு இருக்கு...
உங்களுக்கு வந்தா போதும்...
சரி... சரி... நியூஸ பாரு...
ஒரு காலத்துல எபோலா வைரஸ் வந்து நிறைய பேரு... செத்தாங்க...
இன்னிக்கு கொராேனா வைரஸ் வந்து நிறைய பேரு சாகறாங்க...
என்னதா பொருளாதாரம் இருந்தாலும்...
சுகாதாரம் இல்லன்னா...
மக்களோட வாழ்வாதாரம் இல்லாமா போது பாத்தியா....?
இந்த காலத்துல உணவு மட்டுமில்ல...
மனிச மனமும் ஆரோக்கியமானதா இல்ல...
நியுஸ கொஞ்சம் பாரு...
என்னங்க நீங்க மட்டும்தான்...
எல்லா தெரிஞ்சா மாதிரியே பேசுவீங்க...
அந்த ஊர்ல...
"ஒரு வயதான முதியவரு - தன்னுடைய மனைவிக்கு கொராேனா வைரஸ் இருந்தாலும்... தன் மனைவிய எப்படி பாசத்தோடு கவனிச்சாருன்னு...
அதே நியூஸ்ல தா.. காலையில போட்டாங்க..."
அந்த பாசத்தை முதல்ல நீங்க காட்டுங்க...
ஓகே... ஓகே...
என் செல்ல பொண்டாட்டி :-
உன் கோபமான வாா்த்தைகள் -
எபோலா வைரஸ்
கொராேனா வைரஸ விட
அதிக வலியுடையதாய் இருந்தாலும்-
உன்மீது என்றும் குறையாதிருக்கும்
என்னுடைய காதல் வைரஸ்....!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி