மகத்துவமான மகளிர் தின வாழ்த்துக்கள்

உனக்கு மட்டுமே கிடைத்த அரிய பெரும்பேறு
உதிரத்தை உணவாக்கி குழவிக்கிடும் வாய்ப்பும்
கருவறையோடு பிறந்து கருச்சூலையும் வார்த்தும்
காக்க படைத்தானே இறைவன் உன்னை.

அரும்பெருஞ்சூல் கொண்டு ஆண் பெண் குழவிக்கு
அன்பான தாயாக அறிவு விளக்கும் ஆசானாக
அகத்தை ஒளிர்விக்கும் ஒளியாக அனைத்தும் நீயாக
ஆண்டவனே அதிசயக்கும் அரிய உயிரே.

அறிவில் குறைந்த ஆடாவனுக்கு வாக்கப்படினும்
அண்டை அயலார் அல்லல் சொல் கூறிடினும்
அணி அணியாய் சோதனைகள் பெருகிடனும்
அத்தனையையும் அடிச்சுவடில் அமிழ்திடும் அறமே.

கற்றுத் தெளிந்து கரைக்கண்டு காதலாகி ஏங்கி
கள்ளத்தனத்தில் விழுந்து எழுந்து மறந்து சிறந்து
கடந்தக் கால நிகழ்வை கடும் நெருப்பால் கருக்கி
காவியம் படைக்கும் திறன் பெற்ற திங்களே.

உலகில் உழலும் நாட்களில் உனக்குரிய நாள்
உன்னத மாதமாம் "மார்ச் - ஆங்கில " மாதத்தில்
உரிய தேதி " எட்டு " உனக்கான தினமாம்
உன் புகழ் ஓங்க கதிருக்கு ஒப்பவளே வணங்குகிறேன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Mar-20, 7:36 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 169

மேலே