மகளிர் தினம் - 2020

இன்றேனும் கிடைக்கட்டும் பெண்ணமையின் அங்கீகாரம்
கருவறை வாசத்திலும் காதலிக்க கற்றவள்
பசியில் ருசியை பரிவோடு தருபவள்
அடுப்படி அந்தரங்கங்களை விரல்நுனியில் கொண்டவள்
சாதனை படைக்கும் சூத்திரம் கற்றவள்
மண்ணின் மகத்துவமாய் தாய்நாட்டில் இருப்பவள்
சொல்லின் கருப்பொருளாய் தாய்மொழியில் திகழ்பவளே
விண்ணாளும் வித்தகியாய் திறமைகள் வளர்த்தவளே
நிதானம் பழகு நீடுடி வாழ
சிரிக்க மறவாதே வேகமாக சுழலுகையில்
வீரியம் குறையாமல் வீறுநடை கொண்டிரு
விந்தை உலகிது தனித்துவம் பெற்றிரு
தினம் தினம் கொண்டாடலாம்
உலக மகளிர் தினமாய்

எழுதியவர் : அருண்மொழி (8-Mar-20, 11:53 am)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 1272

மேலே