மகளிர் தின வாழ்த்து
வீட்டிலேயே அடைபட்டு கிடந்த
கூண்டுக்கிளியாய் இருந்த அந்த
காலமெல்லாம் போயே போச்சு ....அது
ஒரு கெட்ட கனவு என்று மறந்திட
இன்றைய பெண் பெண்ணென்ற
தனித்தன்மையோடு கூட தான்
ஆணிற்கு ஒரு போதும் குறை இல்லை
என்று நினைத்து வாழ்ந்தும் காட்டும் வீராங்கனை
நாட்டை காக்கும் ராணுவத்தில் எல்லையில்
ஆண் வீரரோடு சமமாக பணிபுரிய துடிப்பவள்
விமானியாய் விண்ணில் பயணிக்கும் இவள்
விண்வெளி வீராங்கனையாய் சந்திர மண்டலம்
செவ்வாய் என்ற கிரஹங்கள் நோக்கி செல்லவும்
துணிவு காட்டுபவள்........ இவள் படிப்பில் புலி
வீட்டு பணியிலும் பின்தங்குபவள் அல்லள் இவள்
கணவனுக்கு நல்ல மனைவி, பிள்ளைகளுக்கு
அன்பு பொழியும் பாசமான தாய் சமையல் அறையில்
இவள் கைவண்ணம் ...... கேட்கவும் வேண்டுமா
இப்படி ஒருத்தியே பல அவதாரங்களில் சிறந்து நிற்கும்
இந்நாள் நங்கை அநியாயங்களை கண்டு வீணா
இருப்பவள் அல்ல தயங்காது தலை நிமிர்ந்து
தட்டிக்கேட்பவள் ....... இவள் மீ டூ விற்கு அஞ்சி
பல ஆண்மக்கள் கோர்ட்டும் கையுமாய் அலைகிறார்
ஆணிற்கும் பிறப்பு தருபவள் பெண்ணே
அதனால் இவள் ஆணையும் விட ஒருபடி மேலானவள்
இதை ஒப்புக்கொள்ள தயங்கும் ஆணிற்கு
எப்போதும் சிம்ம சொப்பனம் தருபவள்....
எண்ணில் பாதி நீயே என்று மாலும் ஐயனும் சிவனும் சொல்லியும்
மண்ணில் மானிடருக்கு இது புரியும் நாள் எப்போது....
மகளிர் தினத்தில் தாய்க்குலத்தை வாழ்த்தி
தலை வணங்குகிறேன் நான் இன்று
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
