உந்தன் பேச்சின் சுவை

காதலியே என் மனதிற்கினியவளே
உன்னோடு பேசி பேசி உன் பேச்சில்
என்னையே அல்லவா மறக்கின்றேன் நான்
என் மனம் உன்னில் கலந்துவிட்டதோ இல்லை
அந்த உன் பேசும் மொழிதான் மயக்குதோ
என்னை வாசமலரின் தேன் போல அதில்
மயங்கி அதிலேயே உறங்கும் வண்டோ நான்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (12-Mar-20, 11:53 am)
பார்வை : 181

மேலே