தாமரை ஹாசன்

கடைக்குட்டியாய் பிறந்தவர்கள் அனைவரும்
படு சுட்டி யாய் இருப்பார்கள் போலும்
நாட்டியத்தில் ஆரம்பித்து நாயகனாய் உச்சம்பெற்று
கைகளை கோர்த்த வடிவில் கட்சியை ஆரம்பித்து
கருத்தாழம் மிக்க நடிகன் கமலின் முடிவோ சிறப்பு
நடிகன் என்றே ஏளனிப்பினும் நாடறிந்த வல்லவனவன்
பொது அறிவு மிகுந்தவன் புத்தகங்களை கற்றவன்
பொது சித்தாந்தம் கொண்டவன் புதியதை நாடுபவன்
புரியாது அவன் போக்குபொதுஅறிவு குறைந்தோருக்கு
பிறந்தது வைணவ பிராமணன் என்றாலும்
பிசிரில்லாமல் கூறுகிறான் கடவுள் மறுப்பை என்றும்
முரண்படானவனாய் தெரிந்தாலும் முயன்று உயர்ந்தவன்
வாய்ப்பைக் கொடுத்தால் வாலியாய் பலம் பெறுவான்
வளங்குன்ற செய்தால் வருங்காலம் நிந்திக்கும் நம்மை
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாvன் (18-Mar-20, 8:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 133

மேலே