கோரோனோ வைரஸ் பீதி

கோரோனோ வைரஸ் பீதி
பாமர மக்களுக்கு
விடை தெரியாததொரு கேள்வியாய்
இங்கு நம் நாட்டில் இருக்கும் பட்சத்தில்
எம் மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி
முழு மனிதன் பலகீனப்பட்டு
ஆரோக்கியத்தில் ஆகிவிட்டான்
அரை மனிதன்
வைரசால் அல்ல வதந்திகளால்;

ஒரு ஊருக்குள் நூறு பேரிடம்
கோரோனோ வைரஸ் என்றால் என்ன
என்ற கேள்வியொன்று விவாதித்தால்
விவாத முடிவுகள் நூறு விடைகள் தரும்;

கோரோனோ தாக்கம் எப்படி இருக்கும்
கோரோனோ இயற்கையாய் உருவான வைரஸா?
இல்லை செயற்கையாய் வல்லரசு நாடுகளால்
உருவாக்கப்பட்ட போர் ஆயுதமா?
கணிக்க முடியவில்லை சரிவர இதுவேதானென்று;
ஆனால் நாட்டு நிகழ்வுகளை
பின்னோக்கி சென்று யோசிக்கையில்
சில தடயங்கள் மட்டும் புலப்படும்;

தினம் தினம் நாட்டில் ஆயிரக்கணக்கான சாவுகள்
அவைகளில் பெரும்பான்மை வைரஸ் நோய்களே;
புற்றுநோய் மலேரியா டைபாய்டு டெங்கு என
எண்ணிலடங்கா வைரஸ் நோய்களையே இன்னும்
இங்கு முழுதாய் அழித்தபாடில்லை
அதற்குள் அடுத்ததொரு வைரஸ் பீதி கோரோனோ;

இது நோயல்ல நோய் தயாரிப்பு;
வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கும்
இந்தியா போன்ற எண்ணற்ற நாடுகளை
குறிவைத்து தாக்கும்
கணினி அறிவியல் போர் யுக்தி
என்றுதான் சிந்தனை செய்கிறது மனம்;

பள்ளி கல்லூரிகள் திரையரங்குகள்
என கூட்டம் கூடும் இடத்தை
முதற்கட்டமாய் முடக்கிவிட்ட அரசு
மார்ச் 31 வரை என்றொரு தேதியை
கணித்தது எதற்காக என்பது விளங்காத
என் மக்களும் மாணவர்களும்
கடைசிவரை குழப்பத்துடனே இங்கு;

ஒவ்வொரு முறையும் நம் நாடு
ஒரு சம்பவத்தால் அடிபட்டு
வீழ்ந்துவிட அதையே தினம் தினம்
விவாதமாய் தொலைக்காட்சி ஒளிபரப்பு முதல்
கிராமத்து தின்னைவரை பேசிக்கொண்டிருக்கையில்
அதை மறக்கடிக்க வேறு ஒரு நிகழ்வு அரங்கேற்றுகையில்
அதற்கொரு தீர்வு வேண்டி
போராட்டக்களத்தில் மக்கள் சூழ்கையில்
விசித்திரமான வேறொரு
பயங்கரவாதத்தை பரப்பிடவே
மறக்கடிக்கப்படும் மக்கள் மனதில்
முந்தைய நிகழ்வு;

இந்த தொடர் நிகழ்வுகளில்
இன்று மக்களின் விவாதமாய் இருக்கும்
கோரோனோ வைரஸ் அச்சுறுத்தல்
குடியுரிமை போராட்ட சட்டத்தை
மக்கள் மனதில் மறக்கடித்து
திசைதிருப்பும் ஏற்பாடாய் கூட இருக்கலாம்;

புலி வருகிறது புலிவருகிறது
என்று மிரட்டியே பூச்சாண்டி காட்டும் அரசாங்கம்
புலியை விரட்டாமல்
புலியிடம் சிக்காமல் பதுங்கி கொள்
என்பது போலதான் கோரோனோ பீதியும்;

அவசரமாய் கைபேசியில் உரையாடும்
நாழிகைகளை தாமதமாக்கும்
லொக்கு லொக்கு இருமல்
ஆங்கில வழி விழிப்புணர்வு இதுவெல்லாம்
நமது அவசர செய்தி பரிமாற்றத்தை தடுத்து
கேடுதான் விளைவிக்கிறதே தவிர
கேட்பதால் விழிப்படையும் வகையில் இல்லை;

வெறும் விளம்பரம் மட்டுமே
அதிலும் கை கழுவவும்
கர்சீப் உபயோகப்படுத்தவும்
முக கவசம் அணியவும்
கை கொடுக்காமல்
கையெடுத்து கும்பிடவும்
இருமினால் அவனிடமிருந்து
மூன்று மீட்டர் தள்ளி போய்விடவும்
என்றவாறே விழிப்புணர்வு
தொடர்ச்சியாய் தொலைக்காட்சிகளிலும்
கைப்பேசிகளிலும் திகட்ட திகட்ட திணிப்பதால்
விழிப்பு ஏற்படுமா நாடு பிழைக்க என்றால்
வெறுப்புதான் ஏற்படும் முழுக்க முழுக்க;

முககவசம் அணிய சொன்னீர்கள்
கடைக்கு சென்று கேட்கையில்
கையிருப்பு இல்லை என்கிறான் பலர்;
தேடி அலைந்து எங்கோ ஒரு இடத்தில்
முககவசம் கிடைத்ததும்
கையிலிருந்த நூறு ருபாய் கடைக்காரனிடம் நீட்டி
இருபது கொடுத்துவிடுங்கள் என்று கூற
இரண்டே இரண்டு கொடுக்கிறான் அவன்
பத்துமடங்கு லாபம் வைத்து;

எதையெல்லாம் உபயோகி என்றுரைத்த அரசே
அவையெல்லாம் பதுக்கிவைத்து
பலமடங்கு லாபம் பார்க்க உன் துணையின்றி
நிகழுமா தவறுகள் என்றால்
ஒப்புக்கொள்ள மனமில்லை;

வைரஸ் பீதியை பச்சிளங்குழந்தை வரை
பரவிவிடும் கொடியது என்றுரைத்த நீ
அதற்கான தீர்வை செய்திவழி உரைக்காமல்
செயல்வழியில் உரைக்கலாமே
கிராமங்கள் தோறும் மருத்துவ முகாமிட்டு;

எல்லா நிகழ்வுகளும் தினசரி உற்றுநோக்குகையில்
முன்னுக்கு முரணாகவே கிடைக்கிறது பல விடைகள்;
அதுதான் எனக்கான சந்தேகத்தை உறுதிசெய்துவிடுமோ
என்ற அச்சத்தை எழுத்துவழி உரைக்க தோன்றியது;
எனது அச்சமெல்லாம் கத்தியின்றி ரத்தமின்றி
கணினி அறிவியல் கையிலெடுத்து
மூன்றாம் உலகப்போரை தொடுக்க போகிறார்களோ என்பதே;

எதிர் கருத்துக்களை பதிவிடுங்கள் தோழமைகளே
நமது எண்ணங்களை இங்கு ஒன்று சேர்ப்போம்;

நன்றி

மன்னை சுரேஷ்

எழுதியவர் : (18-Mar-20, 10:44 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 112

மேலே