அவள் நடை
சிற்றிடையில் பாங்காய் நீர் நிரப்பிய
குடத்தை இருத்தி இவள் அசைந்தாடி
இல்லம் நோக்கி போகின்றாள் இவள்
அறியாள் இவள் இந்த நடையில் பரதமே
பரதம் கற்குமோ என்று தோணவைப்பதை
என்னென்பது இயற்கையாய் அமைந்த இக்கலைக்கு
இந்த கிராமத்து பைங்கிளி சொல்வாளோ இதற்கொரு பதிலும்