வண்ண விருத்தம்

தந்தத் தானத் தானனா ( அரையடிக்கு )

கொண்டைச் சேவற் கூவுதே
கொஞ்சிக் கூடித் தாவுதே
பண்டைக் காலத் தேரிதோ
பஞ்சைப் போலப் பாயுதே
சண்டைக் காகப் போகுதோ
தங்கைக் கேநற் காவலோ
தண்டைக் காலைப் பாருமே
சந்தப் பாடற் பாடுவீர்!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 2:12 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 36

மேலே