புரியாத காதல் 🌹
உன்மேல் காதல் இல்லை...
உன்மேல் காதல் இல்லாமலும் இல்லை....
இல்லையென்று சொல்லிவிட
ஆசைதான்....
💓இருக்குமோயெனும் ஐயத்தில்
இதயம் துடிக்குது........
❓️கேள்வி இல்லாமல்
விடை தேடுகிறேன்......
விடை வேண்டுமென✔️
விதியை நாடுகிறேன்....
இருதலை கொள்ளி எறும்பாய்
என் இதயமானது.. 🐜
நான் எப்படி இப்படி ஆனேன்.....
என்னை நானே அறியவில்லை....
எனக்கே என் மனம்
புரியவில்லை...
💝இதயத்தில் காதலை வைத்துகொண்டு
விழிகளில் மறைக்கிறேன்....
என் உணர்வுகளை கொன்று
எந்தன் உறவின் பெருமையை காக்கிறேன்......
உந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் சொல்லமுடியாமல்
தவிக்கிறேன்...
ஊமையென நானும் நடிக்கிறேன்...
நடிப்பில் நானும் வென்றுவிட்டேன்..
நான் காதலில் தோற்கவுமில்லை 💔
ஜெயிக்கவும் இல்லை 💞........
--------ஏன்?????????
நான் காதலிக்கவில்லை என்று
காரணம் சொல்லிக்கொண்டேன்...
பாச போராட்டதில்
பணய கைதி ஆனேன்..