அப்பாக்களின் மகள்கள்

அப்பாக்களின் மகள்கள்
அழகாய்த்தானிருக்கிறார்கள்!
குடும்பத்திற்காய் கொற்றவேல் புரியும்
மன்னனையும் சேவகனாய் மாற்றி
சாமரம் வீசச்செய்யும்....

மகள்களுக்காய் மனம், குணம் விட்டு
எதிலும் நிதானம் தொட்டு
வானமே எல்லை என
வையகத்தில் வாழவைக்கும்
அப்பாக்களின்ன்மகள்கள்
அழகாய்த்தானிருக்கிறார்கள்!

அப்பாக்களின் நெஞ்சத்தில்
சிறகடிக்கும் தேவதைகளாய்
சீராட்டி, பாராட்டும்..
சிங்கார இளவரசிகளாய் வலம்வரும்
அப்பாக்களின் மகள்கள்
அழகாய்த்தானிருக்கிறார்கள்!

மகளாகி....மாணவியாகி
மனைவியாய் மாறிபின்
தாயுமாகி.....சேய்தனை சீராட்டி
தாயின் தியாகத்தை
தன்னகத்தே உணர்ந்தபின்பும்
தந்தையை நேர்நிறுத்தும்
அப்பாக்களின் மகள்கள்
அழகாய்த்தானிருக்கிறார்கள்!

"கடவுளே" கணவனாய் வாய்த்தாலும்
என் தந்தைக்கு நிகராகுமா? என
எதிரிக்கேள்வி கேட்கும்
அப்பாக்களின் மகள்கள்
அழகாய்த்தானிருக்கிறார்கள்!

எழுதியவர் : (27-Mar-20, 5:33 am)
சேர்த்தது : krishna viji
பார்வை : 0

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே