காதல்

காதல் ....
இயற்கையில் பெறும் உன்னதம்..
இயற்கையோடு கொள்ளும் சம்மதம்
கவித்துவம் நிறைந்த தனித்துவம்...
மகத்துவம் ஓங்கும் தனி தத்துவம்..
உயிர்களில் ஊறும் அன்பியல்..
உலகத்தின் உயர்ந்த பிறப்பியல்..
அழிவில்லா பிரபஞ்சம் அது...
அதைமிஞ்சும் பிரபலம் எது..?
காதல் கற்றுப்பார்..
காணாத தரிசனம் கிட்டும்
உணர்வுகளின் உச்சம் முட்டும்...
உட்கார்ந்த இடத்திலிருந்தே வானம் எட்டும்..
காதலை கலங்கடிக்காதீர்கள்.
பிறந்த சிசுவின் பிஞ்சு விரல்கள் அது..
நஞ்சில்லாச் சுரக்கும் நல்ல அமிலம் அது..
நஞ்சேற்றி நசுக்கி விடாதீர்கள்..
பஞ்சென்று பற்ற வைத்து விடாதீர்கள்..
சூரையாடி சூனியம் வைத்துவிடாதீர்கள்..
அந்த சுரங்கத்தை சுரண்டி எடுக்காதீர்கள்..
பால்வெளிக்கு பாலூட்டுவதும் அதுதான்..
பாயுமொளிக்கு பசியாற்றுவதும் அதுதான்..
பாமர மக்களின் பகுத்தறிவும்
அதுதான்...
அது காதல் தான்...
-ஜாக்✍️

எழுதியவர் : ஜாக் (6-Apr-20, 8:18 am)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 196

மேலே