உன் விழிகள்
தடாகத்தின் நிர்மல நீரில்
படியில் உட்கார்ந்திருந்த நீ
பெண்ணே கால் வைத்து
உன் கால்களின் அழகை
ரசித்துக்கொண்டிருந்தாயோ
என்னவளே உன் பின்னாலிருந்த நான்
அப்படிதான் என்று நினைன்றேன்
ஒன்று நீ பார்த்தாயா
தடாகத்து பளிங்கு நீரில்
உன்முகம் பளிச்சென்று
உன் அழகின் பூரிப்பின்
பிரதி பிம்பமாய்த் தெரிய
அங்கு துள்ளி ஆடிக்கொண்டிருந்த
கயலிரண்டு உன்விழிகளை பார்த்து
கயல் என்று எண்ணி மயங்கி
துள்ளுவதை நிறுத்தி
உன் விழிகளின்மேல் நின்றுவிட்டனவே !