வதம்

சூரியன் எழும் முன்னே,
சுதாரித்து எழுந்து,
உச்சந்தலையில்,
உள்ளங்கை வெள்ளம்,
வெளி வருமளவிற்கு,
எண்ணையை தேய்த்து,
தண்ணீரில் நீராடி,
அதில் உடலை போர்களமாக்கி,
நீர் சொட்ட,சொட்ட மஞ்சளைக் கொட்ட,
அதை,புது சட்டையில் ஒட்ட,
இருக்கும் இரு கடவுள்கள்,
இல்லாத கடவுளின் கதவை தட்ட,
நெற்றியில் பட்டையை வைத்து,
தீப்பந்தத்தை ஒரு கையில்,
தாள் பந்தத்தை மறு கையில்,
விழாவின் வில்லனை,
தாமே வீழ்த்தியதுப் போல்,
மகிழ்ச்சியுடன் வெளிவந்து,
சிவகாசியின் உழைப்பை உன்னதப்படுத்தி,
சுதந்திரங்களை சுட்டு,
வாழை இலையில் கொட்டி,
வாய்க்கும்,வயிற்றுக்கும் வஞ்சனையற்று,
அருகில் உள்ளவர்களுடன்,
அன்பைப் பகிர்தலுடன்,
நிகழ்ச்சி நிரல்...

எழுதியவர் : கதா (13-Apr-20, 5:00 am)
சேர்த்தது : கதா
பார்வை : 83

மேலே