சித்திரை வருடப் பிறப்பு
சித்திரை மாதத்திற்கே ஒரு
தனி மகத்துவம் கூறும் புராணங்கள்
சித்திரையில் நான்முகன் படைப்பு தொடக்கம் என்ப
பிரம்மனே இன்று உம் படைப்பில் எம்மை
இந்த உலகையே தன் ஆதிக்கத்தில் வைத்து கோர தாண்டவம் ஆடும் இந்த கொரோனாவெனும்
அரக்கனை அழித்திட ஒரு சக்தியை படைத்திடுவாய்யப்பா
துயர் தீர்ந்து உலகோர் மீண்டும் இல்லம் தோறும்
மகிழ்ச்சி பொங்க உம்மை துதித்து வாழ்ந்திட
சர்வாரியாம் வருடம் தொடங்கும் சித்திரையே எமக்கு
வாழ்வில் சிறப்பெல்லாம் தந்திடுவாயம்மா