நிறைவாழ்வு

நிழல்களை அறியாத
நிஜங்களின் கூட்டம் !
நிரந்திரமிலா வாழ்வில்
நித்தமொரு வேடம் !
நிலம்புலம் இருந்தும்
நிறையாத நெஞ்சம் !
நிச்சயமற்ற உலகில்
நிறைவேறா ஆசைகள் !
நியதிதவறி பொருளீட்டி
நிம்மதியின்றி திரிவோர் !
நியாயமான் என்றுரைத்து
நிலைமாறும் எண்ணற்றோர் !
நிறைகுணம் நிதார்த்தம்
நிறைவாழ்வின் அடித்தளம் !
நிலைகெடுதல் வழிவகுக்கும்
நிம்மதியற்ற வாழ்க்கைக்கு !

( நிதார்த்தம் = நேர்மை )

பழனிகுமார்
15.04.2020

எழுதியவர் : பழனி குமார் (15-Apr-20, 1:45 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 340

மேலே