காடுகள் காய்ந்தன ஆடுகள் மேய்ந்தன

அன்று,
காலை வெயிலில்
மரத்தின் நிழலில்
நான் படுத்திருந்தேன்
அழகிய வயலில்
ஆடுகள் மேய்ந்தன
ஒரு பகலில்....

ஆடுகளின் அருகில்
பறவைகள் வருகையில்
அவற்றின் சிறகில்
மகிழ்ச்சி நிறைந்தன...

இன்று,
காலை வெயிலில்
காய்ந்த மரத்தின் நிழலில்
நான் படுத்திருந்தேன்
காய்ந்த வயலில்
ஆடுகள் மேய்ந்தன
ஒரு பகலில்...

ஆடுகளின் அருகில்
பறவைகள் வருகையில்
அவற்றின் சிறகில்
மகிழ்ச்சி மறைந்தன...


நாளை,
காடுகள் காய்ந்தன
ஆடுகள் மேய்ந்தன
இந்த நிலை தொடர்ந்தன
ஆடுகள் வாடின
பறவைகள் ஓடின
நான் மட்டும் இருப்பேன்...




இயற்கையை சுவாசிப்போம்...
காடுகளை காப்போம்....

எழுதியவர் : நாச்சான் (19-Apr-20, 2:37 pm)
சேர்த்தது : நாச்சான்
பார்வை : 126

மேலே